பல்வேறு துறைகள் இணைந்து செயல்படுத்துகின்றன

அடையாறு ஆற்றைப் பாதுகாத்து, அதன் பழைய அடையாளத்தை மீட்டெடுக்க தமிழக அரசு ரூ.555.46 கோடி ஒதுக்கியுள்ளது. பல துறைகள் இணைந்து செயல்படுத்தப்படும் இப்பணிக்காக திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்துவருகிறது.

வண்டலூர் அடுத்த ஆதனூர் கிராமத்தில் தொடங்குகிறது அடையாறு ஆறு. மொத்தம் 42 கி.மீ. நீளம் கொண்ட இந்த ஆறு, பெருங்களத்தூர், திருநீர்மலை, அனகாபுத்தூர், பொழிச்சலூர், நந்தம்பாக்கம், சைதாப்பேட்டை ஆகிய பகுதிகள் வழியாகச் சென்று, பட்டினப்பாக்கம் அருகே கடலில் கலக்கிறது. ஆக்கிரமிப்புகள், தொழிற்சாலைகள் கழிவுநீர், குப்பை மற்றும் கரை உடைப்பு என பல்வேறு வழிகளில் தன் அடையாளத்தை இழந்துவிட்ட அடையாறு ஆறு, கழிவுநீர் ஆறாக நாசப்படுத்தப்பட்டுள் ளது.